கருணை வள்ளல் இயேசுவே
கிருபையால் என்னை நடத்தினீர்
இருளை நீக்கியே ஒளியாய் மேவியே
அருளை ஈந்தென்னை தாங்கினீரே
ஆனந்தமாய் துதிப்பேன் - உம்மை
அனுதினமும் புகழ்வேன் - அல்லேலூயா
அன்பரே உம்மையல்லால் - இந்த
அவனியில் யாரும் இல்லை(2)
1. இஸ்ரவேலின் கூக்குரலால்
இறங்கி வந்து மீட்டவரே
ஏழை என் சத்தமே கேட்டுமே என்றுமே
அலைபோல் நன்மைகள் பொழியுவீர்
2. அல்லல்கள் பலமாய் படகினிலே
அலைகள் போல மோதிடினும்
காற்றை அதட்டியே கடலை அமர்த்தியே
கொற்றவனே கரை சேர்ப்பீரே
3. மகிமையின் நல் நம்பிக்கையும்
மகிபனே நல் ஜீவீயமும்
மகிமை பெலன் தனில்
நித்தமும் காத்துமே
மகிமை அடைந்திட செய்துடுவீர்
4. நாட்கள் வேகமாய் சென்றிடுதே
நாதனே இன்னும் தாமதம் ஏன்?
தேடியே உந்தனின் பாதமே நாடியே
ஓடியே வந்தென்னை படைக்கிறேன்
HOME
More Songs